Headlines
Admin-message
thumbnail

ஜனாதிபதியினால் விருது பெற்ற கல்மடு மகாவித்தியாலய ஆசிரியருக்கு பாடசாலை சமூகம் கௌரவிப்பு

2016ஆம் ஆண்டின் சிறந்த ஆசிரியருக்கான "பிரதிபா பிரபா" விருது கடந்த 5ஆம் திகதி வழங்கப்பட்டது.

இந்த விருது கொழுப்பு தாமரை தடாக கலையரங்கில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டது.

இதன்போது வவுனியா கல்மடு மகா வித்தியாலயத்தில்  நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிக் கொண்டிருக்கும் தமிழ் பாட ஆசிரியர் திரு . புண்ணியமூர்த்தி ஸ்ரீசங்கர் அவர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அமைச்சின் செயலாளர் சுனில் கெட்டியாராச்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதனடிப்படையில் குறித்த ஆசிரியரை கௌரவிக்கும் முகமாக 2013ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களும் இணைந்து நேற்றைய தினம் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த விழாவில் கல்மடு கிராமத்திற்கு பெருமை தேடித்தந்த ஆசிரியர் புண்ணியமூர்த்தி ஸ்ரீசங்கர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் வாழ்த்து மடல்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த விழாவில் வட மாகாணசபை உறுப்பினர் இந்திரராசா,பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழய மாணவர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்..




Read More»

thumbnail

உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவன் - மகிழ்ச்சியா? துக்கமா?




உலகிலேயே அதிக எடை கொண்ட 10 வயது சிறுவன் கண்டறியப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவைக் சேர்ந்த ஆர்யா பேர்மன் என்ற சிறுவன், பத்து வயதிலேயே 192 கிலோ எடையாக உள்ளார்.

இந்த சிறுவனுக்கு அதிக எடை இருப்பதால் சாதாரண உடைகள் அணிய முடியாமல் சரம் மட்டுமே கட்டிக்கொண்டு வாழ்க்கையை நடாத்துகின்றார்.

இவருக்கு நடப்பது சிரமமாக உள்ளதால் தனது படிப்பை மேற்கொள்ள முடியாமல் தற்போது வீட்டில் உள்ளார்.

குறித்த சிறுவன் அவரது அதிக நேரத்தை நீர்த் தொட்டியிலேயே கழிப்பதாக சிறுவனின் தாயார் கூறியுள்ளார்.
இச்சிறுவனுக்கு சாதாரன உடைகள் அணியமுடியாமையால் சாரத்தினை மட்டுமே உடையாக அணிந்து வருகின்றார். இந்தோனேஷியா உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் இருந்து, ஆர்யா தூரம் நடக்க முடியாமையால் படிப்பும் கைவிடப்பட்டள்ளது. - See more at: http://www.manithan.com/news/20160701120530#sthash.JBLMaxXk.dpuf
உலகிலேயே அதிக உடல்பருமனுள்ள பத்து வயது சிறுவன் கண்டறியப்பட்டுள்ளார். இந்தோனேசியாவை சேர்ந்த ஆர்யா பேர்மன என்ற 10 வயது சிறுவன் 192 கிலோகிராம் நிறையினை கொண்டுள்ளார்.
இச்சிறுவனுக்கு சாதாரன உடைகள் அணியமுடியாமையால் சாரத்தினை மட்டுமே உடையாக அணிந்து வருகின்றார். இந்தோனேஷியா உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் இருந்து, ஆர்யா தூரம் நடக்க முடியாமையால் படிப்பும் கைவிடப்பட்டள்ளது.
- See more at: http://www.manithan.com/news/20160701120530#sthash.JBLMaxXk.dpufமஉளஅனஉ
உலகிலேயே அதிக உடல்பருமனுள்ள பத்து வயது சிறுவன் கண்டறியப்பட்டுள்ளார். இந்தோனேசியாவை சேர்ந்த ஆர்யா பேர்மன என்ற 10 வயது சிறுவன் 192 கிலோகிராம் நிறையினை கொண்டுள்ளார்.
இச்சிறுவனுக்கு சாதாரன உடைகள் அணியமுடியாமையால் சாரத்தினை மட்டுமே உடையாக அணிந்து வருகின்றார். இந்தோனேஷியா உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் இருந்து, ஆர்யா தூரம் நடக்க முடியாமையால் படிப்பும் கைவிடப்பட்டள்ளது.
- See more at: http://www.manithan.com/news/20160701120530#sthash.JBLMaxXk.dpuf
Read More»

thumbnail

ஆண்களை வெறுப்பேற்ற பெண்கள் என்ன எல்லாம் சொல்லுவார்கள்?


ஒவ்வொரு உறவிற்கும் ஒவ்வொரு எல்லை இருக்கிறது.எல்லைகள் அற்ற உறவு என்பது காதலும் நட்பும் தான். இந்த வகையில் பெண்கள் சில வசனங்களை சொல்லும் போது எமமை வெறுப்பேற்ற இப்படி எல்லாம் பேசுகின்றார்களே! என ஆண்களுக்கு தோணும்.

அந்த வககையில் பெண்கள் என்னவெல்லாம் வசனங்களை கூறுகின்றார்கள் என்று நோக்குவோம்,

1. தோள்களில் சாய்ந்து குமுறி குமுறி அழுது, போகும் இடமெல்லாம் நானும் வருவேன், போ வா என பாசமாக பழகி விட்டு கடைசியில் “ நான் உங்கள் உயிர் தோழி ” என கூறுவது.

2. ஒரு அக்கறைல தான் நான் உன் வாழ்க்கை, உன் வேலை பத்தி அதிகமா அக்கறை எடுத்துக்கிட்டேன். மற்றபடி தப்பா வேற எதுவும் இல்ல.

3. எனக்குள் சில கனவுகள் இருக்கு. அத என்னால இழக்க முடியாது. ஆசைகள் இருக்கு . என்னால இப்ப வேறு எதுலையும் கான்சென்றேட் பண்ண முடியாது.

4. எல்லாரோடயும் பலகுற மாதிதானே உங்களேடயும் பலகினன், உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி தோனிச்சி?

5. நா எங்க போனாதான் உங்களுக்கு என்ன? என்ன உடுத்தினா தான் உங்களுக்கு என்ன? உங்க வேலையை நீங்க பாருங்க ஓகே

பாத்தீங்கள்,பெண்கள் என்ன எல்லாம் பேசி ஆண்கள் மனதை உடைக்கிறாங்கனு.
Read More»

thumbnail

மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை பலி


தங்காலை – குடாவெல்ல நகுலுகமுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி மூன்று வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

வீட்டிற்கு தண்ணீரை பெற்று கொள்ளும் நீர் மோட்டார் ஒன்றில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, குறித்த குழந்தை தனது பட்டனாருடன்  மோட்டார் பரிசிலனை செய்யும் இடத்தில் இருந்துள்ளது.

இதன்போது, மோட்டாரின் மின்வயர் ஒன்றில் இருந்து மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More»

thumbnail

அண்ணா இல்லாத உலகில் வாழ விரும்பாத தங்கை - தீயில் குதித்து தற்கொலை



ராஜஸ்தான் மாநிலத்தில் விபத்தில் இறந்துபோன தமையனின் சிதையில் குதித்து தங்கை ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் துங்கார்பூர் மாவட்டம் சதிராம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்ராம் மனத் (வயது 35). இவரது சகோதரி துர்க்கா (வயது 28). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

துர்க்கா கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அண்ணன் வேல்ராம் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அண்ணன் மீது துர்க்கா அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் வேல்ராம் உயிரிழந்தார்.

பின்னர் அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.வேல்ராம் உடல் தகனமேடையில் வைக்கப்பட்டு சிதைக்கு நெருப்பு மூட்டியபின்னர் உறவினர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

அப்போது சுடுகாட்டிற்கு சென்ற துர்க்கா, எரிந்துகொண்டிருந்த அண்ணனின் சிதையில் திடீரென குதித்துள்ளார்.

இதைப் பார்த்த ஒருவர், துர்க்காவின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க, அவர்கள் சுடுகாட்டிற்கு விரைந்து வந்தனர்.

அதற்குள் துர்க்கா உடல் கருகி இறந்து விட்டார்.அவர் இறந்ததை டாக்டர் உறுதி செய்ததையடுத்து, பாதி எரிந்த நிலையில் இருந்த அவரது உடல் முழுவதுமாக எரியூட்டப்பட்டது.

அண்ணன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் அவரது சிதையில் குதித்து தங்கை உயிரைவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More»

thumbnail

தேன் எடுக்கச் சென்றவரை கடித்து குதறிய கரடி!


மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவலி கங்கைக் காட்டுப்பகுதிக்கு தேன் எடுக்கச் சென்ற நபர், கரடி தாக்குதலுக்குள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்டாளி புரத்தைச் சேர்ந்த ஐந்து பேர், நேற்று (01), மஹாவலி கங்கை பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்காகச் சென்றுள்ளனர். 

இதன்போது, தோப்பூர் பட்டாளிபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சி. இராசரத்தினம் என்ற நபரே இவ்வாறு கரடியின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

எனினும் இவரை கரடியிடமிருந்து காப்பாற்றிய மற்றையவர்கள் அவரை தோப்பூர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் குறித்த நபரை மேலதிக சிகிச்சைகளுக்காக தோப்பூர் வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More»

thumbnail

மயத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் ஒரு தமிழர்


இலங்கை மத்திய வங்கி ஆளுநராக புதிய ஆளுநர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின சற்று முன்னர் நியமித்துள்ளார்.

அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான இந்திரஜித் குமாரசுவாமி, பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் பணிப்பாளராக இருந்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இவர் பதவியை ஏற்றுக்கொள்ள உள்ளார்.

மேலும், கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றிருந்தார்.

இதேவேளை,1973ஆம் ஆண்டு இவர் இலங்கை மத்திய வங்கியில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read More»

thumbnail

சுவாதியை கொன்ற கொடூரன் சிக்கினான்! தொடர்ந்து என்ன நடந்திருக்கும்?

பெண் பொறியாளர் சுவாதி கொலையில் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கடந்த 24-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம வாலிபர் தப்பி ஓடியிருந்தார்.

கடந்த ஒரு வார காலமாக கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் பொலிஸார் தடுமாறி வந்தனர். இந்நிலையில் சுவாதியை கொலை செய்ததாக திருநெல்வேலியில் ராம்குமார் என்பவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.



இது குறித்து மேலும் தெரியவருகையில்,

ராம்குமார் செங்கோட்டை அருகிலுள்ள மீனாட்சிபுத்தை அடுத்த பன்பொழி கிராமத்தை சேர்ந்தவர். ஆலங்குளம் பொறியியல் கல்லூரியில் பி,இ., படித்தவர்.

வேலை தேடி சென்னை சென்ற ராம்குமார், சூளைமேட்டிலுள்ள மேன்ஷன் ஒன்றில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியுள்ளான். அப்போது சுவாதியுடன் ராம்குமாருக்கு ஒருதலைக்காதல் ஏற்பட்டுள்ளது.

ராம்குமார் 3 மாதமாக முயற்சித்தும் தனது காதலை சுவாதி ஏற்காததால், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து அரிவாளால் வெட்டி கொடூரமாக கொன்றுள்ளான்.
 
சுவாதி கொலை செய்ததை ராம்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.

ராம்குமார் கைது செய்யப்பட்டது எப்படி? 
 
இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட்டு குற்றவாளியை விரைவாக கைது செய்ய நெருக்கடி கொடுத்தது. இதனால் குற்றவாளியை விரைவாக கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

சுவாதியுடன் வேலை பார்த்தவர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உட்பட 100 பேருக்கு அதிகமானோரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினார்கள். ஆனாலும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட சுவாதியின் மொபைல் போனை கொலையாளி சம்பவ இடத்திலிருந்து எடுத்து சென்றுள்ளான்.
இதனையறிந்த பொலிஸார், சுவாதியின் நண்பர் ஒருவரின் எண்ணிலிருந்து சுவாதியின் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்., ஒன்றை உடனடியாக அனுப்பியுள்ளனர்.

கொலை நடந்த நாளன்று காலை 8 மணி முதல் 8.10 மணி வரை சுவாதியின் மொபைல் போனை கொலையாளி ஆன் செய்து வைத்துள்ளான். அப்போது எஸ்.எம்.எஸ்., டெலிவரி ஆகியுள்ளது. 

இதனை வைத்து ஆய்வு செய்த பொலிஸார், செல்போன் சிக்னல் சூளைமேடு பகுதியில் இருந்ததை கண்டறிந்தனர்.

இதனையடுத்து ஒரு தனிப்படை பொலிஸார் கணினி மூலம் வரையப்பட குற்றவாளியின் புகைப்படத்தை கொண்டு சூளைமேடு பகுதியில் வீடு வீடாக சென்று விசாரணை மேற்கொண்டார்கள்.

இதில் சுவாதியின் வீடு அருகில் இருக்கும் மேன்சன் ஒன்றின் வாட்ச்மேனிடம் பொலிஸார் நேற்று விசாரித்ததில், மேன்சனில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் ஒருவாரமாக அறைக்கு வரவில்லை என்ற தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அவரது அறையின் பூட்டை உடைத்து பொலிஸார் சோதனை நடத்தினார்கள். அறையில் அவரது வீட்டு முகவரி உட்பட இளைஞரை பற்றி கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து நேற்று இரவு 12 மணியளவில் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் ராம்குமாரை அவரது வீட்டில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

கொலை நடந்த போது அணிந்திருந்த இரத்தக்கறை படிந்த சட்டையை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று தெரிந்ததும் ராம்குமார் தனது கையில் வைத்திருந்த பிளேட்டினால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அடுத்து உடனடியாக அவரை மீனாட்சிபுரம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராம்குமாரின் கழுத்தில் எக்ஸ்ரே எடுக்கப்பட்ட பின், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பின் ராம் குமார் பேச ஆரம்பித்தான். அவனிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராம்குமாரின் தந்தை பரமசிவம் , தாய் மற்றும் தங்கை மற்றும் சகோதரர் ஆகிய நால்வரிடமும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் இந்த கொலையில் ராம்குமாருக்கு அவரது நண்பர் ஒருவர் உதவி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

சூளைமேட்டில் ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷனிலும் விசாரணை நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.
Read More»

thumbnail

விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்




யாழ்ப்பாணம் தென்மராட்சி வேம்பிராயன் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
 
இந்த சம்பவம் இன்று பிற்பகல் வேளையில் நடந்துள்ளதாக அறிய முடிகின்றது

குறித்த விபத்தில் மட்டுவில் வடக்கைச் சேர்ந்த றஞ்சா என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்

இந்த இளைஞன் வீட்டிற்கு பலாப் பழம் கொண்டு சென்றபோது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விளகி விபத்துக்குள்ளாகி உள்ளது.
Read More»

thumbnail

மாட்டு இறைச்சியின் சுவையில் மரக்கறி பர்கர் - புது சாதனை


சான் பிரான்சிஸ்கோவில் தாவரங்களில் இருந்து இறைச்சி போன்ற சுவையுடைய பர்கரைத் தயாரித்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் இறைச்சி அதிக அளவில் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. நீண்ட காலமாகவே இறைச்சிக்கு மாற்றாக அதே சுவையுடைய உணவுப் பொருளை உருவாக்க வேண்டும் என்று நிபுணர்கள் முயற்சி செய்து வந்தனர்.

ஆனால், சான் பிரான்ஸ்சிகோவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டது.

கடந்த 5 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, மாட்டு இறைச்சியைப் போன்ற நிறமும் சுவையும் உடைய பொருளை உருவாக்கிவிட்டனர்.
Read More»

thumbnail

பதுளையில் பஸ் விபத்து - 28 பேர் படுகாயம்


பதுளை - கலவுட பிரதான வீதியில் உள்ள போகஸ்தென்ன பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து இன்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இவ்விபத்தில் 26 பயணிகள், பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் படுகாயத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

படுகாயத்திற்குட்பட்டவர்களை கண்டேகெதர வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும், கவலைக்கிடமான நிலையில் உள்ள 15 பேரை பதுளை வைத்தியசாலைக்கு இடமாற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More»

thumbnail

திருமணத்தில் இணைய இருந்தவர்கள் மரணத்தில் இணைந்தார்கள்


அநுராதபுரத்தைச் சேர்ந்த 21 வயதான ருவான் குமார என்ற இளைஞனும், பொலன்னறுவையைச் சேர்ந்த 19 வயதான அயேஷா என்ற யுவதியும், அநுராதபுரம், புதபிம மஹாபுலன்குளப் பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து இன்று திங்கட்கிழமை (27) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

காதலித்து வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், இருவரையும் வீட்டினர் சாமாதனப்படுத்தி திருமண பேச்சுக்களை முடித்துள்ளனர்.

நாளை செவ்வாய்க்கிழமை (28) திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவிருந்த வேலை இவர்கள் அனுராதபுர சிறிய குளம் ஒன்றில் குளிக்க சென்றுள்ளனர்.

பின்னர் தாமரை பறிக்கும் தோணி ஒன்றில் ஏறி குளத்தை சுற்றி வந்துள்ளனர். குளத்தின் நடுப்பகுதியில் வைத்து அந்த தோணி புரண்டுள்ளது இருவரும் நீரில் விழுந்துள்ளனர்.

அதனை கரையில் இருந்து அவதானித்த சிறுவர்கள் இவர்கள் விளையாட்டுக்கு இவ்வாறு செய்கிறார்கள் என நினைத்து உதவிக்கு யாரையும் அழைத்தில்லை.

இன்று குளத்தில் மூழ்கிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Read More»

thumbnail

விரைவில் சிக்குவான் சுவாதியை கொலை செய்தவன்


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ந் தேதி காலையில் கம்யூட்டர் பெண் என்ஜினீயர் சுவாதியை மர்ம ஆசாமி ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.

ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கமரா எதுவும் இல்லாததால், கொலையாளியை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை.

ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் பதிவான கண்காணிப்பு கமரா காட்சிகளை அன்று (24–ந் தேதி) மாலையிலேயே பொலிஸார் வெளியிட்டனர்.

இந்த நிலையில், நேற்று இந்த கொலை சம்பவம் தொடர்பாக புதிய வீடியோ காட்சி ஆதாரத்தை பொலிஸார் அதிகாரபூர்வமாக வெளியிட்டனர்.

அந்த காட்சியில் இடம்பெற்றிருக்கும் நபரும், கடந்த 24–ந் தேதி பொலிஸார் வெளியிட்ட சந்தேகப்படக்கூடிய நபரின் உருவப்படமும் ஒத்துப்போகிறது.

கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளில் வந்த சந்தேகப்படக்கூடிய மர்மநபரின் உருவப்படத்தை தனியாக எடுத்து அதை பெரிதாக்கி அவரை அடையாளம் தெரிகிற வகையில் படத்தை பொலிஸார் தயார் செய்து விட்டதாகவும், இன்னும் 4 நாட்களில் அவனை பிடித்து விடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read More»

thumbnail

ஜப்பானில் மஹிந்தவுக்கு உடல் பரிசோதனையா?


ஜப்பானுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, நரிடா விமான நிலையத்தில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 நாள் பயணமாக ஜப்பான் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச, கொழும்பு திரும்புவதற்காக ரோக்கியோவின் நரிடா விமான நிலையத்துக்குச் சென்ற போது, இரண்டாவது முனையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரி குண்டுகள் மற்றும் உலோகப் பொருட்களைக் கண்டுபிடிக்கும் கருவியைக் கொண்டு உடல் பரிசோதனையை மேற்கொண்டார்.

மகிந்த ராஜபக்ச ஜப்பானுக்கான தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்ளும் போது, இராஜதந்திர நெறிமுறை உதவிகளை இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கோரியிருந்தார்.

எனினும், வெளிவிவகார அமைச்சு அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More»

thumbnail

இரு உயிரை வயிற்றில் சுமந்த நிறைமாத கர்ப்பிணி விபத்தில் பலி


கடந்த பொசன் பௌர்ணமி தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுடன் குழந்தைகளும் பலியான துயரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் அம்பாறை தெய்யத்தகண்டிய பிரதேசத்தில்கடந்த 19 ஆம் திகதி ஞாயிற்று கிழமை இடம்பெற்றுள்ளது.

கணவரும், ஏழு மாத கர்ப்பிணி பெண்ணும் தான சாலையில் உணவு உண்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். வேகமாக வந்த முச்சக்கர வண்டி ஒன்று மோட்டார் சைக்கிளை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் காயமடைந்த கர்ப்பிணி பெண்ணையும் அவர் வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகளையும் காப்பற்ற தெய்யத்தகண்டிய வைத்தியசாலையின் மருத்துவர்கள், தாதியர் உட்பட ஊழியர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இவர்களை காப்பற்ற முடிய வில்லை.

இதேவேளை, தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Read More»

thumbnail

வித்தியாவின் தாயாரை மிரட்டியவருக்கு நீதிமன்றில் கிடைத்த பரிசு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜுலை மாதம் 5 ஆம் திகதி வரை ஊர்காவற்றுறை நீதிமன்றம் நீடித்துள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக அவரது தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் வித்தியா கொலை வழக்குச் சந்தேகநபர்களான சுவிஸ்குமாரின் தாயார் மகாலிங்கம் தவராணி, உசாந்தனின் தாயார் சிவதேவன் செல்வராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி ஆர்.சபேசன், சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு விண்ணப்பம் கோரியுள்ளார்.

எனினும் பிணை மனுவை நீதவான் எம்.எல்.றியால் நிராகரித்ததோடு, வித்தியா கொலை வழக்கு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கு என்பதால் சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க முடியாது எனவும், மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்யுமாறும் தெரிவித்து சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை நீடித்து மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.
Read More»

thumbnail

மீண்டும் ஆரம்பித்துள்ளதா வெள்ளை வேன் கடத்தல்கள்?


வெவேல்தெனிய - பஹலகம பிரதேசத்தில் வெள்ளை வான் ஒன்றில் வந்த சிலர் ஒருவரை கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்தப்பட்ட நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வெள்ளை வான் ஒன்றில் வந்த சிலர் நேற்றிரவு கடத்திச் சென்றதாக கடத்தப்பட்டவரின் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

வெவேல்தெனிய - பஹாலகம பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான திஸ்ஸ குமார செனவிரட்ன என்ற நபரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

காணாமல் போயுள்ள நபரின் தாய் மீரிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். கடத்தல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போயுள்ள நபர் கொள்ளை உட்பட குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர் என மீரிகம பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Read More»

thumbnail

யாழ்.மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆசிரியர் கைது


யாழ்.பெரியபுலம் பாடசாலையில் மாணவிகளுடன் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தகுற்றச்சாட்டில் குறித்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது டன், மேலும்பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியை ஒருவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.

குறித்த பாடசாலையில் தரம் 7ல் கல்வி கற்கும் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்ட மை தொடர்பாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் முறைப்பாடு செய்துள்ளதுடன், மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினையும் இன்றைய தினம் காலை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அதிபர் மற்றும்ஒரு பெண் ஆசிரியை ஆகியோரை தேடி வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
Read More»

thumbnail

தொண்டமான் அமைச்சரா? மறுக்கின்றார் முத்துசிவலிங்கம்


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்படவிருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

எனினும் இதனை நிராகரித்த இ.தொ.கா. தலைவரும் எம்.பி.யுமான முத்து சிவலிங்கம் ஜனாதிபதிக்கான ஆதரவு தொடருமென்றும் தெரிவித்தார்.

இ.தொ.கா. பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் ஐ.தே.முன்னணி ஆட்சியுடன் இணையவிருப்பதாகவும் அவ்வாறு இணைந்த பின்னர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியும் மேலும் ஒருவருக்கு பிரதியமைச்சர் பதவியும் கிடைக்கவிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

இதன்போது ஆறுமுகன் தொண்டமானுக்கு கால் நடை அபிவிருத்திக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவி வழங்கப்படலாம் என்றும் தெரியவருகிறது.

இவ்விடயம் தொடர்பாக இ.தொ.கா தலைவரும் எம்.பி.யுமான முத்து சிவலிங்கத்திடம் கேட்ட போது,

ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியில் இணைவது, அமைச்சர் பதவிகளை இ.தொ.கா பெற்றுக்கொள்ளும் என்ற செய்திகளில் உண்மையில்லை. இதனை நிராகரிக்கின்றேன்.

இ.தொ.கா. இன்று வரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே தனது ஆதரவை வழங்கி வருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கான ஆதரவு தொடரும்.

இது தொடர்பாக அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீரவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இதன் போது எமது ஆதரவை புதுப்பித்துக் கொண்டோம் என்றார்.
Read More»

thumbnail

ஐந்தாவது நாளாகவும் போராடும் ஆயுர்வேத ஊழியர்கள்


ஆயுர்வேத ஊழியர்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்றும் ஐந்தாவது நாளாக தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

இராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலை முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முக்கியமாக இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் பற்றியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது. கடந்த வருடம் ஜூன் மாதம் 1000 ரூபாய் மேலதிக கொப்பனவு தருவதாக கூறி நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால் குறித்த கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும், எமது நிலுவையில் இருக்கக்கூடிய கொடுப்பனவுகளைக் கூட இந்த அரசு இன்னும் வழங்கவில்லை, நாம் தொடர்ந்தும் ஐந்தாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம், ஆனால் இதுவரை எந்த அரச அதிகாரியோ அல்லது அமைச்சரோ இது தொடர்பில் உரிய தீர்வினை பெற்றுத் தரவில்லை என குற்றம் சுமத்தினார்.

பல வருடங்களாக நிலுவையில் இருக்கும் எனது கொடுப்பனவுகள் கொடுக்கப்படும் வரை தாம் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் இதன்போது ஆயுர்வேத பணியாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த குருகே தெரிவித்தார்.
Read More»

thumbnail

200 கோடி கொக்கெய்ன் விவகாரம்! பிரதான சந்தேகநபரை நெருங்கிய பொலிஸார்

பிரேஸிலில் இருந்து சீனி இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளிடையே 200 கோடி ரூபா பெறுமதியான 80 கிலோ கொக்கெய்ன் போதைப்பொருளினை நாட்டுக்குள் கடத்தியசம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆரம்பித்துள்ளது.

அதன்படி இந்த கொக்கெய்ன் போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ளதாக கருதப்படும் பிரதான சந்தேகநபரான பிரேசில் பிரஜை தற்சமயம் இலங்கைக்குள் இருப்பதாக சந்தேகிக்கும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அவர் தப்பி செல்லக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் அதனை தடுக்க தீவிர நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் ஊடாக தகவல்களை சேகரித்துள்ள பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சந்தேக நபர் தப்பிச் செல்வதை தடுக்கும் முகமாக அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து இலங்கையில் உள்ள பிரேசில் தூதரகமும் போதைப் பொருள் தடுப்புப் பணியகம் ஊடாக தகவல்களை சேகரித்துள்ள நிலையில் அந்த தூதரகமும் பிரத்தியேக விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளது.
Read More»

thumbnail

வாகனம் கேட்டதை நிரூபித்தால் பதவி விலகுவேன் - இராஜாங்க அமைச்சர்


35 மில்லியன் பெறுமதியான வாகனத்தை தான் கோரவில்லை என்றும் உறுதிபடுத்தினால் அரசாங்கத்தை விட்டு செல்ல தயார் எனவும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நீர்பாசன அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனத்தை தான் கோரியுள்ளதாக தெரிவித்து, தன்னுடைய புகைப்படத்துடன் செய்திகள் வருவதாகவும், இராஜாங்க அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த செயலானது எதிர்கட்சியின் செயல் இல்லை  என்றும்,இது ஆளுங்கட்சியின் ஒருவருடைய சதி வேலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களிடம் செல்வதற்கு வாகனம் அவசியம் என்றும்,ஆனால் தனக்கு சொகுசு வாகனம்அல்லாமல் சாதாரண வாகனம் என்றாலும் கவலைபட மாட்டேன் எனவும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
Read More»

thumbnail

பிரித்தானிய பெண் பாராளுமன்ற உறுப்பினர் துப்பாக்கி சூட்டில் மரணம்!


பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான ஜோ காக்ஸ், தான் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நூலகத்தின் வெளியே, சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடையே தலையிட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த இரண்டு நபர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், காக்ஸ் அவருடன் போராடியபோது அவர் சுடப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் ரத்த வெள்ளத்தில் நடை பாதையில் விழுந்துகிடந்த நிலையிலும்கூட, தாக்குதலில் ஈடுபட்டவர் அவரை தொடர்ந்து கத்தியால் குத்தத் தொடங்கினார்.

இத்தாக்குதல் அவர் மீது குறிவைத்தே நடத்தப்பட்டது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

இது குறித்து 52 வயது நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிரதமர் டேவிட் கேமரன், கிப்ரால்டருக்கு செல்லவிருந்த தனது திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளார்.
Read More»

thumbnail

மாத்தளையில் காணாமல் போன மாணவர்கள் யாழில் கண்டுபிடிப்பு


மாத்தளை நாவுல பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தரம் 8 மற்றும் 9ம் தரத்தில் கல்வி கற்கும் டி.எம் சசிந்த பண்டார மற்றும் எ.ஜி.எஸ்.எஸ். அம்பகஸ்பிட்டிய என்ற குறித்த மாணவர்களே காணாமல் போயுள்ளனர்.

கடந்த 14ம் திகதி குறித்த இருவரும் காணாமல் போயுள்ள நிலையில் 15ம் திகதி குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் நாவுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனடிப்படையில் குறித்த மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மாணவர்கள் தொடர்பான தகவலை பொலிஸார் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Read More»

thumbnail

இறங்க விடுங்கள் இல்லையேல் சுட்டுத்தள்ளுங்கள் - இந்தோனேசிய கடலில் இலங்கை அகதிகள்


இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் படகில் இருந்து இந்தோனேசிய கரையில் இறங்கிய பெண்களை எச்சரிக்கும் வகையில் அந்நாட்டு காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இலங்கைத் தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் படகு இந்தோனேசியாவின் அச்சே பிராந்திய கடற்கரையில் கடந்த சனிக்கிழமை கரையொதுங்கியது.

குறித்த படகிலுள்ள புகலிட கோரிக்கையாளர்களை தரையிறங்க விடாமல் அந்நாட்டு அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், படகில் இருந்த சிறுவன் ஒருவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, தம்மை தரையிறங்க அனுமதிக்குமாறும் புகலிட கோரிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், அதற்கு அதிகாரிகள் மறுப்பு வெளியிட்டுள்ள நிலையில், நேற்று படகில் இருந்த ஐந்து பெண்கள் கடற்கரையில் குதித்தனர். இதனால் அவர்களுக்கு சிறியளவில் காயங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து, அகதிகள் தரையிறங்குவதை தடுக்கும் நோக்கில் வானத்தை நோக்கி இந்தோனேசிய காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அத்துடன், தரையிறங்கிய பெண்கள், மீண்டும் படகில் ஏற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், படகின் இயந்திரத்தை திருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More»

thumbnail

மூலதன வரி மீண்டும் அறிமுகம்


நீண்ட காலமாக கைவிடப்பட்டிருந்த மூலதன வரியை மீண்டும் அறிமுகப்படுத்த நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு முன்வைத்திருந்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கடந்த சில தசாப்தங்களாக தனியார் துறையின் மூலதனம் பன்மடங்காக அதிகரித்திருப்பதன் காரணமாக வருமானப் பங்கீடு முறையாக நடைபெறுவதில்லை.

இதனைக் கருத்திற் கொண்டே மூலதன வரியை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதனை நிவர்த்தி செய்யும் வகையிலேயே புதிய வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், பொருளாதார முகாமைத்துவ உபகுழுவும் அதனை அங்கீகரித்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வரி பெரும் செல்வந்தர்களிடமிருந்து மட்டுமே அறவிடப்படவுள்ளதுடன், வரியின் வீதம் மற்றும் ஏனைய விபரங்களை விரைவில் நிதியமைச்சு வெளியிடும் என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
Read More»

thumbnail

ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்துள்ளது! நிதி அமைச்சர்


ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களை மேற்கொள்ள போதியளவு பணம் உள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது. அந்நிய செலாவணி ஒதுக்கம் குறைவடையவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் பணம் வரவுள்ளது. நாட்டுக்கு வரும் ஒவ்வொரு சதமும் நாட்டின் அபிவிருத்திக்காகவே பயன்படுத்தப்படும்.

இதனிடையே, ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது, தற்போது அமெரிக்க டொலரின் பெறுமதி 144 ரூபாவாக காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Read More»

thumbnail

யாழிலுள்ள ஜனாதிபதி மாளிகை தற்போது வடமாகாண சபையிடம்


யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட காங்கேசன்துறை - கீரிமலை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைத்த சொகுசு மாளிகையை வடமாகாணசபைக்கு வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை கோரும் பிரேரணை வடமாகாணசபையில் எடுக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாகாணசபையின் 54ம் அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்த நிலையில் மேற்படி சொகுசுமாளிகையை வடமாகாணசபைக்கு வழங்குமாறு கோரும் பிரேரணையினை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையில் முன்மொழிந்தார்.

குறித்த பிரேரணையினை சபையில்முன்மொழிந்து அவர் உரையாற்றுகையில் மாகாணசபையின் வதிவிட முகாமைத்துவ பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும், மாகாணத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தங்குவதற்கும், மாநாடுகளை நடத்துவதற்கும் பொருத்தமான கட்டிடங்கள் இல்லை.

இந்நிலையில் மேற்படி மாளிகை கட்டிடத்தை மாகாணசபைக்கு வழங்குமாறு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை கோருவதாக கூறினார்.

மேலும் இந்த விடயத்தை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன்வைத்ததாகவும், அதற்கமைய முதலமைச்சர் தமக்கு முறைப்படியா கவிடயத்தை தருமாறும் கேட்டதற்கிணங்க இந்த பிரேரணையை தாம் முன்மொழிவதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் குறித்த பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆட்சிமாற்றத்தின் பின்னர்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த மாளிகையை பார்க்க வந்தபோது அதனை தாமும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் வடமாகாணசபைக்கு வழங்குங்கள் என ஜனாதிபதியிடம் கேட்டதற்கு குறித்த மாளிகையின் வேலைகள் முடிந்த பின் தருகிறேன்.என கூறினார் என கூறிய முதலமைச்சர் அதனை யாழ்.பல்கலைக்கழகமும் கேட்டிருக்கும் நிலையில் நாம் கேட்பது பொருத்தமானது என்றார்.

இந்நிலையில் குறித்த பிரேரணை சபையில்எந்தவித எதிர்ப்புக்களும் இல்லாமல் நிறைவேறியுள்ளது.
Read More»

thumbnail

மோடியை சந்தித்தார் ஜெயா


தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 6-வது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார்.

பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஜெயலலிதா இன்று பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார்.

தனி விமானம் மூலம் டெல்லி சென்ற முதலமைச்சர் ஜெயலிதா மதியம் 2.00 மணிக்கு டெல்லி போய் சேர்ந்தார்.

சுமார் 4.00 மணியளவில் டெல்லி, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி வீட்டிற்கு சென்று, பிரதமரை சந்தித்து பேசினார்.

அப்போது தமிழகத்திற்கு தேவையான 29 அம்ச கோரிக்கைகள் அடங்கிய 26 பக்க மனுவையும் பிரதமர் நரேந்திர மோடியிடம், ஜெயலலிதா வழங்கினார்.

அந்த மனுவில், ''தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நதி நீர் இணைப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன
Read More»

thumbnail

நடுகடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் - காப்பாற்றிய மீனவர்கள்

இந்தியாவின் கோடியக்கரை கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியொருவர் உள்ளிட்ட மூன்று இலங்கை தமிழர்கள் அந்த நாட்டு மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தமிழகத்தின் நாகப்பட்டினம் மீனவ குழுவொன்று மீட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

வவுனியாவைச் சேர்ந்த 27 வயதான துஷ்யந்த், 24 வயதுடைய துவாரகா மற்றும் இரண்டு வயதுடைய காகிதா ஆகியோரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

சில நாட்களாக கடலில் உணவு எதுவுமின்றி தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கையர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டதுடன், அவர்களுக்கு தேவையான உணவும் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த மூன்று பேரும் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
Read More»

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top