நீர்பாசன அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
35 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனத்தை தான் கோரியுள்ளதாக தெரிவித்து, தன்னுடைய புகைப்படத்துடன் செய்திகள் வருவதாகவும், இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த செயலானது எதிர்கட்சியின் செயல் இல்லை என்றும்,இது ஆளுங்கட்சியின் ஒருவருடைய சதி வேலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களிடம் செல்வதற்கு வாகனம் அவசியம் என்றும்,ஆனால் தனக்கு சொகுசு வாகனம்அல்லாமல் சாதாரண வாகனம் என்றாலும் கவலைபட மாட்டேன் எனவும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
