Headlines
Admin-message

ஜனாதபதியின் பெயரால் பணமோசடி- ஒருவர் கைது

Published by Shaila on  | 


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவஸ்திபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதான குறித்த சந்தேகநபரை, கந்தளாய் குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்த நபர் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் பணிப்பாளராக கடமையாற்றுவதாக தெரிவித்தே நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

கந்தளாய் பகுதியிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதாக கூறி குறித்த நபர் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top