Headlines
Admin-message

சிறுநீரக நோய்க்கு பிரதான காரணம் சுத்தமற்ற குடிநீர் - ஜனாதிபதி

Published by Shaila on  | 


இலங்கையில் வருடமொன்றிட்கு 5000 சிறுநீரக நோயாளர்கள் புதிதாக இனங்காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறுநீரக நோயிற்கு பிரதான காரணம் சுத்தமற்ற குடிநீர் என்பதால், இந்த குடிநீர்பிரச்சினையை ஒருவருடத்திற்குள் முற்றாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த குடிநீர் பிரச்சினைக்கு சர்வதேச அளவில் ஒத்துழைப்புகள் கிடைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா - கெலேபோகஸ்வௌ பிரதேசத்தில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் அமைக்கப்பட்ட புதிய நீர் வடிகட்டும் இயந்திரத்தை நேற்றைய தினம் திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top