அனர்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்காக 12 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
அந்த ஒவ்வொரு குழுவிலும் பிரதேச அபிவிருத்தி அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரி, பொலிஸ் அதிகாரி, மற்றும் சிவில் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
கொஸ்கம - சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் பிரதேசத்தில் உள்ள 654 கட்டிடங்கள் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
