வாகன இறக்குமதியாளர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களுக்கு தேவையான வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்து உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் வரை அமைச்சர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு நிதியை வழங்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
