குறித்த வைத்தியரின் வீடு நுகேகொடை-நாவல பிரதேசத்தில் அமைந்துள்ளதோடு, நீதிமன்றில் பெறப்பட்ட வாரன்ட் (ஆணை)க்கு அமையவே சோதனையிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் சந்தேகிக்கும் படியான செயல்பாடுகள் இடம்பெறுவதாகவும், அங்கு குழிகள் இரண்டு வெட்டப்பட்டு சந்தேகத்துக்கிடமாக ஏதோ புதைக்கப்பட்டுள்ளதாகவும், இரகசியப் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுக்கமைய விசாரணைகளை மேற்கொள்வதற்காக குறித்த வீட்டை சோதனை செய்வதற்கு இரகசியப் பொலிஸார் நீதிமன்றின் அனுமதியைக் கோரியிருந்தனர்.
நீதிமன்றின் ஆணைக்கமைய குறித்த வீட்டை நேற்றைய தினம் சோதனையிட்ட போது அங்கு சந்தேகிக்கும் படியான எதுவும் இல்லை என்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
