Headlines
Admin-message

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞன் காயம்

Published by Shaila on  | 


வெல்லவாய - அலுத்வெல பிரதேசத்தில் நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் பலத்த காயங்களுக்கு மத்தியில் சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாகவே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபர் 22 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக,27 வயது நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top