Headlines
Admin-message

கிணற்றில் விழுந்து குழந்தை பலி

Published by Shaila on  | 


தாய் மற்றும் பாட்டியுடன் வயலுக்குச் சென்ற மூன்று வயது குழந்தை கல்கமுவ-மிகல்வெவா பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிகல்வெவா பிரதேசத்தை சேர்ந்த சதிஸா இசுறு விஹான்ஸ என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குழந்தையின் சித்தி கண்ணயர்ந்த நேரத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்து குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைகளை முடித்து விட்டு வந்த குழந்தையின் பாட்டி மற்றும் தாய் குழந்தையை காணவில்லை என சத்தமிட்டுள்ளனர்.

சத்தத்தை கேட்ட விவசாயி விரைந்து வந்து குழந்தையை கிணற்றில் கண்டு காப்பாற்ற குதித்த போது குழந்தை உயிரிழந்துள்ளதாக விவசாயி தெரிவித்துள்ளார்.

குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மிகல்வெவா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top