Headlines
Admin-message

நிதி அமைச்சிற்கு சிலர் டீல் அமைச்சு என பெயரிட்டுள்ளனர் - மஹிந்த யாப்பா

Published by Shaila on  | 


நல்லாட்சி என்ற வசனத்தை இந்த அரசாங்கம் துண்டு துண்டாக கிழித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்பார்த்த நல்லாட்சி நாட்டில் தற்போது காணப்படுகின்றதா என்ற கேள்வியை நாம் மக்களிடம் முன்வைக்கவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

கடந்த அரசாங்கம் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் இன்று இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் போன்று சிறு களவுகள் இடம்பெறவில்லை பாரியளவில் கொள்ளைகள் இடம்பெறுகின்றன.

நிதி அமைச்சிற்கு சிலர் இன்று டீல் அமைச்சு என பெயரிட்டுள்ளனர்.
எனவே இந்த அரசாங்கம் இனியும் நல்லாட்சி பற்றி பேசும் தகுதி கிடையாது என மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top