சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பொறுப்பதிகாரியிடம் சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
வாக்குமூலம் பெறப்பட்ட போது மேலதிக நீதவானை தவிர வேறு எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தாஜூடீன் கொலை தொடர்பான தகவல்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
