புல்மோட்டை பிரதேசத்தின் பாடசாலை ஒன்றில் 14 மற்றும் 15 வயது மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, பெற்றோர்கள் மூலம் மாணவர்கள் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் (07) முறைப்பாடு செய்திருந்தனர்.
குறித்த முறைப்பாட்டினையடுத்து பொத்துவில் பகுதியைச் சேர்ந்த ஜானதிலக கருணாசேன (40 வயது) என்ற ஆசிரியரை கைது செய்து விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியருக்கெதிராக இதுவரை 05 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இன்னும் சில மாணவர்கள் பெற்றோர்கள் ஊடாக முறைப்பாடுகளை வழங்கி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
