Headlines
Admin-message

சாலாவ வெடிப்புச் சம்பவத்திற்கு மகிந்தவும் கோத்தபாயவுமே பொறுப்பு: அகில விராஜ்

Published by Shaila on  | 


சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் ஏற்க வேண்டும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், சர்வதேச தரத்திற்கும் அனுபவத்திற்கும் அமைய ஆயுதங்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

போர் முடிந்து 6 வருடங்கள் கழிந்திருந்த நிலையிலும் முகாமில் இருந்த ஆயுதங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனடிப்படையில், பொறுப்பை அவர்கள் புறந்தள்ளி உள்ளனர்.
எனினும் தற்போது ஆயுதங்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஆயுதங்களை அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை வெறுமனே செய்து விட முடியாது. ஆயுதங்களை அப்புறப்படுத்த தீர்மானித்திருந்தால், அதற்கான ஆவணங்களை வெளியிட வேண்டும்.

இதற்கு முன்னர் 2009ம் ஆண்டு வவுனியாவில் ஆயுத கிடங்கு ஒன்று வெடித்தது. 2014ம் ஆண்டிலும் அப்படியான சம்பவம் நடந்தது. அந்த காலத்தில் ஊடகங்கள் இந்த செய்திகளை வெளியிடவில்லை.

இந்த விடயம் தொடர்பில் அன்று உரிய நடவடிக்கைகளை எடுக்காதோர் தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top