Headlines
Admin-message

கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்தை முடக்கிய கபரகொய்யா

Published by Shaila on  | 


கொழும்பு - வத்தளை பிரதான வீதியில் கபரகொய்யா எனப்படும் ஒருவகை பல்லியின உயிரினம் ஒன்று திடீரென குறுக்காக வந்ததால், குறித்த பகுதியில் பெரும் பதட்டநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று கொழும்பிலிருந்து வத்தளைக்கு செல்லும் பிரதான வீதியில் நடந்துள்ளது.

இதனால் கொழும்பை அண்மித்த பகுதியில் பெரும் வாகனநெரிசல் காணப்பட்டதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

வீதியின் குறுக்கே நின்ற உயிரினத்தை விரட்டும் முயற்சியில் பிரதேச மக்கள் ஈடுபட்டுள்ளதுடன், சிலர் குறித்த பாதையில் பயணிப்பதற்கு அச்சப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் அடிக்கடி மழை பெய்துவருவதால் முதலை, பாம்பு, உடும்பு போன்ற ஊர்வன மக்களின் இருப்பிடத்தை நோக்கி படையெடுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top