Headlines
Admin-message

கொஸ்வத்த பகுதியில் கைகுண்டு தாக்குதல் - மூவர் பலி

Published by Shaila on  | 


தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஹீனட்டிகும்புற வீடமைப்பு திட்ட வீதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் இருவரும் ஆணொருவருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

9 வயதான சிறுமியொருவரும் தாய் ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top