Headlines
Admin-message

கொஸ்கம இராணுவ முகாமில் திடீரென தீ பரவல்

Published by Shaila on  | 


கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தினால் அதனைச் சூழ 8 மீற்றர் தூரத்தில் வசிப்போரை அந்த இடங்களிலிருந்து அகன்று செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்டுள்ள தீவிபத்தினால் ஒரு புறம் கலுஅக்கல வரையும் மறுபுறம் அவிஸ்ஸாவலை வரை வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த வெடிப்பு சம்பவத்தினால் இராணுவத்தினர் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை தீயைக் கட்டுப்படுத்த இராணுவத்தின் பெல் வர்க்க விமானம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முப்படையினரும்,தீயணைப்பு படையிரும் தீயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும்,அந்தப் பிரதேசத்தைச் சூழவுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வெடிப்பு சம்பவத்தின் சத்தமானது 50 கிலோமீற்றர தூரத்தில் உள்ள தெரணியகல நூரி தோட்டம் வரை கேட்டதாகவும், வெளிவரும் புகை,வெளிச்சங்களைக் கொண்டு கொஸ்கம பிரதேசத்தை பார்க்க கூடியதாகவுள்ளதாகவும் இந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்தப் பிரதேசத்துக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top