இலங்கை நீதித்துறை மீதான நம்பிக்கை மீண்டுமொரு முறை இழக்கப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது.
அனுமதி பத்திரமின்றி யானை குட்டியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேயிற்கு பிணை வழங்கப்பட்ட நடைமுறை தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம் அதற்கான காரணம் என முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நடவடிக்கையின் ஊடாக இலங்கை சர்வதேச ரீதியில் மீண்டும் நிர்கதி நிலைக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என முன்னணியின் ஆலோசகர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
நீதி கட்டமைப்பின் சுயாதீன தன்மையை பாதுகாத்துக் கொள்வதற்காக எதிர்வரும் காலங்களில் போராட்டங்களை நடாத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
திலின கமகே சட்டத்தரணி ஊடாக நேற்று முன்தினம் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

