Headlines
Admin-message

22 வயது மருமகளை உயிரோடு தீயிட்டுக் கொளுத்திய மாமியார்: தானேயில் கொடூரம்

Published by Shaila on  | 


தானேவில் 22 வயது மருமகளை, அவரது மாமியார் மற்றும் கணவர் ஒன்றாக சேர்ந்து உயிரோடு தீயிட்டுக் கொளுத்தி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்னை அண்டை வீட்டார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பெண்ணின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து கணவர், மாமியார் உட்பட ஐந்து பேர் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், குடும்பத்தில் நடக்கும் சிறிய சிறிய பிரச்சனைகளுக்கு அப்பெண்னை, மாமியார் அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் மாமியாரை கைது செய்துள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top