ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது நீதிபதி இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், வித்தியாவின் தாயாரை சந்தேகநபர்களின் உறவினர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில வழக்கு தவணைகளின் போது வித்தியாவின் தாயார் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் இது தொடர்பாக தெரிவித்திருந்தார்.
அதன்படி இது தொடர்பாக விசாரணை செய்யுமாறு ஊர்காவற்துறை பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
