ஜனாதிபதி காரியாலயத்தில் இந்தக் கூட்டத்தை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை கூட்டு எதிர்க்கட்சி கொண்டுவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆளும் கட்சியின் கூட்டத்தில் ஜனாதிபதியும் பங்கேற்க உள்ளார். பொதுவாக ஆளும் கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் தலைமையிலேயே நடத்தப்படும்.
எனினும் இம்முறை ஜனாதிபதி தலைமையில் 6ம் திகதி மாலை 6 மணிக்கு ஆளும் கட்சியின் கூட்டம் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
