அத்துடன் தொடர்ந்து 12 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்று புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது மாணவி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த வழக்கு தவணையின் போது நீதிமன்றினால் கோரப்பட்ட அறிக்கைகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் அடுத்த தவணையில் அறிக்கைகளை சமர்ப்பிப்பதாக குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸார் நீதவானிடம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து 12 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டார்.
