Headlines
Admin-message

பொலிஸ்மா அதிபர் அமெரிக்கா விஜயம்

Published by Shaila on  | 


பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அமெரிக்காவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

நேற்று பொலிஸ்மா அதிபர் அமெரிக்காவிற்கான பயணத்தை ஆரம்பித்திருந்தார்.

உலகப் பொலிஸ்மா அதிபர்களுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு அமெரிக்காவிற்கு விஜயம் செய்கின்றார்.

பூஜித் ஜயசுந்தர மீளவும் நாடு திரும்பும் வரையில் பதில் பொலிஸ்மா அதிபராக எஸ்.எம். விக்ரமசிங்க கடமையாற்றுவார்.

பொலிஸ்மா அதிபர்களின் மாநாடு அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 10ம் திகதி பொலிஸ்மா அதிபர் ஜயசுந்தர நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top