Headlines
Admin-message

வவுனியாவில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த தேநீர் கடைக்காரர் கைது!

Published by Shaila on  | 


வவுனியா வடக்கு, ஒலுமடு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 54 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐந்தாம் தரத்தில் கல்வி கற்றுவரும் இம் மாணவி (வயது 10) மாலைநேர வகுப்புக்கு பாடசாலைக்கு வந்து செல்கையிலேயே தேனீர்க் கடைக்காரரான 54 வயதுடைய குறித்த சந்தேகநபர் துஷ்பிரயோகத்தை புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரு நாட்களாக சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சிறுமி தெரிவித்துள்ள நிலையில் தற்போது சிகிச்சைக்காக சிறுமி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top