குறித்த சம்பவம் மனிக்ஹின்னை உரிகடுவ பிரதேசத்தில் இன்று (30) பதிவாகியுள்ளது.
குழந்தையின் தாயார், நேற்று (29) மாலை தனது குழந்தை அதிக காய்ச்சலால் அவதியுற்றிருந்த நிலையில் குறித்த தனியார் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
மனிக்ஹின்னை மாவட்ட வைத்தியசாலையில் பணி புரியும் பெண் வைத்தியர் ஒருவரே வைத்தியசாலையில் இருந்துள்ளதாகவும் இவராலேயே தன் குழந்தைக்கு குறித்த மருந்து தரப்பட்டதாகவும் தாயார் வசந்த குமாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக குழந்தையின் தாயார் மனிக்ஹின்னை பிரதேச பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும், அது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
