Headlines
Admin-message

லசந்த கொலை ஆவணங்களை புலனாய்வு பிரிவுக்கு வழங்குமாறு உத்தரவு

Published by Shaila on  | 

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக இராணுவ புலனாய்வுப் பிரிவினரிடம் இருக்கும் ஆவணங்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் இராணுவ தளபதிக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றிய லசந்த விக்ரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி துப்பாக்கி தாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கண்டறிய பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top