Headlines
Admin-message

சுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு கோரிக்கை

Published by tamilkurall on  | 


சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவை பணி நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சில் நாளுக்கு நாள் அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளதாகவும் தகுதியான பொருத்தமான ஒருவரை சுகாதார அமைச்சராக நியமிக்குமாறும் சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

பொருத்தமான ஒருவரை நியமிக்க முடியாவிட்டால் சுகாதார அமைச்சின் பொறுப்புக்களை ஜனாதிபதியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜிதவின் ஏதாச்சாதிகார செயற்பாடுகளினால் சுகாதாரத் துறை பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கிய அமைச்சரின் சிரேஸ்ட புதல்வரின் பணிகளுக்கு சுகாதார அமைச்சின் வாகனங்களும் ஏனயை வளங்களும் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான மருந்துப் பொருட்களில் தங்களது பெயரை பொறித்து எவ்வாறு மக்களுக்கு விநியோகம் செய்ய முடியும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top