Headlines
Admin-message

நடுவானில் வட்டமடித்த வேற்றுகிரக வாசி

Published by Shaila on  | 


அமெரிக்கா வான்வெளியில் அடையாளம் தெரியாத அதிசய பொருள் பறப்பது போன்ற காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது சரியாக அமெரிக்கா இராணுவ தளத்திற்கு மேல் பறந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது ஏலியன்ஸின் உளவு பார்க்கும் கருவியா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது.

ohio மாகாணத்தின் dayton நகரில் வசிக்கும் தம்பதியினர் இக்காட்சியை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இருவரும் வீட்டிலிருந்து சூரிய அஸ்தமனத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது, குறித்த அதிசய பொருள் வானத்தில் மிதந்து கொண்டிருந்ததை கண்டு வியந்துள்ளனர், பின்னர் அதை படம் பிடித்து பதிவு செய்துள்ளனர்.

பின்னர், ஏலியன்ஸ் நிகழ்வுகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வரும் Secure Team 10 என்ற குழுவிற்கு குறித்த காட்சியை அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய அக்குழு உறுப்பினர் ஒருவர், அதிசய பொருளின் காட்சியை அதே பகுதியில் வசிக்கின்ற மூன்று பேர் பதிவு செய்துள்ளதாகவும், இது ஏலியன்ஸின் கருவியாக இருக்கும் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top