Headlines
Admin-message

100 அடி உயரத்திலிருந்து விழுந்த கல்! ஒருவர் பலி இருவர் படுகாயம்

Published by Shaila on  | 

காலி - ஹபராதுவ தித்தக்கல பிரதேசத்தில் கருங்கல் சுரங்கம் ஒன்றில் நடந்த விபத்து காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.

கருங்கல் சுரங்கப் பகுதியில் பாரவூர்தி ஒன்றுக்கு கல் ஏற்றிக் கொண்டிருக்கும் போது 100 அடி உயரத்தில் இருந்து கல் ஒன்று கீழே விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 59 வயதுடைய, தித்தக்கல தொலகும்புரவத்தை பகுதியை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.
இதில் படுகாயத்திற்கு உள்ளான இருவரும் சிசிச்சைக்காக கரப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top