Headlines
Admin-message

தண்ணீரில் மூழ்கிய படகு: தக்க சமயத்தில் 19 பேரின் உயிரை காப்பற்றிய மீட்பு குழு

Published by tamilkurall on  | 


பிரித்தானியாவின் kent கடற்பகுதியில் விபத்துக்குள்ளான காற்றால் நிரப்பப்பட்ட படகிலிருந்து 19 பேரை ஹெலிகொப்டர் உதவியுடன் மீட்பு குழுவினர் காப்பாற்றியுள்ளனர்.

Kent பகுதியில் உள்ள the coast of Dymchurch இடத்தில் ஒரு காற்றால் நிரப்பப்பட்ட படகு மூழ்கி கொண்டிருப்பதாகவும், படகில் உள்ளவர்களை காப்பாற்ற உதவி வேண்டி பிரித்தானியாவின் கடலோர பொலிஸ் படைக்கு அழைப்பு வந்துள்ளது.
இதைதொடர்ந்து குறித்த விபத்து நடந்த பகுதிக்கு அருகில் உள்ள Dungeness மற்றும் Littlestone பகுதியை சேர்ந்த மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் ஹெலிகாப்டர் மற்றும் கப்பலில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தக்க சமயத்தில் விபத்து பகுதியை கண்டறிந்த மீட்பு குழுவினர், ஹெலிகொப்டர் உதவியின் மூலம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 19 பேரை மீட்டுள்ளனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தும் படி எல்லையோர பொலிஸ் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top