Headlines
Admin-message

முறிகண்டியில் வாகன விபத்து - இருவர் படுகாயம்

Published by tamilkurall on  | 


யாழ் - கொழும்பு பிரதான வீதியின் முறிகண்டி பிரதேசத்தில் சிறிய ரக பிகப் வண்டியும் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த விபத்து இன்று காலை நடந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த இருவர் முறிகண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்ட இடத்தை அண்மித்த பகுதிகளில் வாகன நெரிசல் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை முறிகண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top