Headlines
Admin-message

பெண்கள் விடுதிக்குள் நுழைந்த இராணுவச் சிப்பாய் கைது

Published by tamilkurall on  | 

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீட மாணவர்களின் , பெண்கள் விடுதிக்குள் இரவு நேரத்தில் பிரவேசித்த இராணுவச் சிப்பாயை அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த இராணுவச் சிப்பாய் அனுராதபுரம் பண்டாரபுளியங்குளம் பிரதேசத்தில் உள்ள பெண்கள் விடுதிக்குள்ளேயே பிரவேசித்துள்ளார்.
இந்த சிப்பாயை விடுதியின் பாதுகாவலர்கள் பிடித்து, பின்னர் அனுராதபுரம் பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.
திருமணமானவரான 28 வயதான இந்த இராணுவச் சிப்பாய், அனுராதபுரம் இலுக்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்காக அவர் சேவையாற்றி வரும் சாலியபுர இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top