ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லியப்பு பீக் ரெஸ்ட் விடுதிப் பகுதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று (28) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வான் கினிகத்தேனையிலிருந்து ஹற்றன் நோக்கி சென்று கொண்டிருந்த போது வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து காலநிலை சீர்கேட்டினாலேயே ஏற்பட்டுள்ளது என ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தில் பயணிகளுக்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் ஹற்றன் பொலிஸார் மேலதிக விசாரணையினை நடத்தி வருகின்றனர்.

