கைதியாக இருந்த நிலையில் தனக்கு சுகவீனம் என கூறி பொய் பித்தலாட்டம் செய்து தன்னை பொது மருத்துவமனையில் அனுமதித்துக் கொண்டதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார்.
கைதிகள் நலன்புரி சங்கத்தினால் நடத்தப்பட்ட 99ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களாயின் அவர்களின் வாழ்கை மாத்திரமல்ல நாட்டின் பொருளாதாரமும் அபிவிருத்தி அடையும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் கலந்துக் கொண்டுள்ளதுடன் வெள்ளை வேன் கலாச்சாரம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் அதிகாரிகளை சுதந்திரமாக வேலை செய்ய அனுமதித்திருப்பதாகவும் பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனையை அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

