Headlines
Admin-message

மாணவ சமூகம் கல்வியை தவிர்த்து அடாவடித்தனங்களில் ஈடுபடக் கூடாது! கோ.கருணாகரம் மா. உ

Published by tamilkurall on  | 


கல்வி கற்க வந்த மாணவர்கள் தங்கள் கல்வியோடு மாத்திரம் கவனத்தினைச் செலுத்த வேண்டுமே தவிர, அடாவடித்தனங்களில் ஈடுபடுவது எவராலும் விரும்பத்தக்கதல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பிலும், தற்போது நடைபெற்று வருகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
தனது முகப்புத்தகத்தில் மே 18 பற்றிய படத்தினை பதிவேற்றிய கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இது மாதிரியான சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம்.
இந்தத் தாக்குதல் தொடருமாக இருந்தால் எதிர்காலத்தில் தமிழ் மாணவர்களும் இந்த அடாவடித்தனங்களைக் கையிலெடுத்தால் அது ஒரு இன முரண்பாடுகளை ஏற்படுத்தி பாரதூரமான விளைவுகளைக் கொண்டு வரும்.
எனவே கல்வி கற்க வந்த மாணவர்கள் தங்கள் கல்வியோடு மாத்திரம் கவனத்தினைச் செலுத்த வேண்டுமே தவிர, அடாவடித்தனங்களில் ஈடுபடுவது எவராலும் விரும்பத்தக்கதல்ல.
அத்துடன், கல்வி கற்க வந்த மாணவர்கள் தங்கள் கல்வியோடு மாத்திரம் கவனத்தினைச் செலுத்த வேண்டுமே தவிர தேவையற்ற விடயங்களில் மூக்கை நுழைத்து தங்களது எதிர்காலத்தில் தங்களது எதிர்காலத்தை வீணாக்கி பல்கலைக்கழகத்தின் கௌரவத்தையும் குறைக்கும் வகையிலும் நடந்து விடக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top