Headlines
Admin-message

பௌத்த பிக்குமாருக்கு அரசியல் பேசும் தகுதியில்லை! அமைச்சர் ராஜித அதிரடி

Published by tamilkurall on  | 


பௌத்த பிக்குமார் அரசியல் பேசும் உரிமையற்றவர்கள் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பரபரப்பான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
1950ம் ஆண்டு மே மாதம் பிறந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் 65 வது பிறந்த தினம் நேற்றாகும்.
இதனை முன்னிட்டு கொழும்பு, மருதானையில் வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன, தேர்தல் அரசியலில் வெற்றி பெறும் நோக்கிலக் நாட்டில் இனவாதம் வளர்த்துவிடப்பட்டுள்ளது. குறித்த மனப்பான்மையில் இருந்து நாம் அனைவரும் விடுபட வேண்டும்.
பௌத்த பிக்குகளுக்கு அரசியல் பேசும் தகுதியோ, யாரையும் கண்டபடி விமர்சிக்கும் உரிமையோ இல்லை. அதே நேரம் இனவாதம் பேசுவது பௌத்த துறவறத்துக்கே தகுதியற்ற விடயமாகும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top