அடுத்த வாரத்தில் இதற்கான அறிவித்தல்கள் விடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மகன் ஜொஹான் பெர்ணான்டோ கடந்த வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
போலியான ஆவணங்களை காட்டி பல மில்லியன் ரூபாய் பெறுமதியான எதினோலை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.
இவர், சுமார் 200 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான எதனோலை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

