மண்சரிவு ஏற்படக் கூடுமென தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ள ஆறு மாவட்டங்களிலும், மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் நாளாந்தம் இராணுவத்தினர் கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளனர்.
குறித்த பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கவும் தேவையான சந்தர்ப்பத்தில் குடியிருப்பாளர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளில் இராணுவ கண்காணிப்பு ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவ்வாறு கண்காணிப்பு மேற்கொள்வதன் மூலம் அபாயங்களை கண்டறிந்து அனர்த்தங்களில் ஏற்படக்கூடியஅரநாயக்க பிரதேசத்தில் பாரியளவில் மண்சரிவு ஏற்பட முன்னதாக அந்தப் பகுதியில் சில அறிகுறிகள் தென்பட்ட போதிலும் அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமையே பாரிய உயிர்ச் சேதம் ஏற்படக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
ஆறு மாவட்டங்களின் 45 பிரதேச செயலகப் பிரிவுகளில் பாரியளவில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இழப்புக்களை வரையறுக்க முடியும் என ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

