கடந்த காலங்களில் அரசாங்கத்துக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தி மத்திய வங்கியின் கடன்பத்திரங்கள் விற்பனை மோசடி காரணமாக அர்ஜுன் மகேந்திரனுக்கு மீண்டுமொரு பதவிக்காலம் வழங்கப்படக் கூடாது என்பது இவர்களின் கோரிக்கையாகும்.
மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனின் பதவிக்காலம் எதிர்வரும் ஜுன் மாதத்துடன் முடிவடைகின்றது.
குறித்த கோரிக்கைக்கு ஆதரவாக இரண்டு முக்கிய அமைச்சர்களும், அரசாங்கத்திற்கு ஆதரவான சிவில் அமைப்புகளும் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றையும் குறித்த தரப்பினர் அமைச்சர்களின் பங்களிப்புடன் நடத்தியுள்ளனர்.
எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை எதுவித முடிவும் எடுக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

