இந்திய கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய தீவு சுற்றுப்பயணத்திற்கு பின்னர், ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இதன்போது, அந்நாட்டு உள்ளுர் அணிகளுக்கு எதிராக மூன்று கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் அணிகள், ஐசிசியுடன் இணைப்பில் இருக்கும் நாடுகளுடன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போட்டிகளில் விளையாட பிசிசிஐ சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவு வழங்கியுள்ளது.
மேலும், ஐபிஎல் போட்டிகளுக்கு உலக நாடு முழுவதும் ரசிகர்கள் அதிகாரித்து வருவதாகவும். உலகில் அதிகமாக பேசப்பட்டு வரும் லீக் போட்டியாக ஐபிஎல் உருவெடுத்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
ஐபிஎல் 2016 தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை என்பது நினைவுக் சுரதக்கது.

