Headlines
Admin-message

இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த சோதனை

Published by tamilkurall on  | 

இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னோட்டமாக ‘டால்கோ’ ரயில் பெட்டிகளை அதிவேகமாக செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது.
வரும் 2023ம் ஆண்டுக்குள் இந்தியாவில் புல்லட் ரயில் போக்குவரத்து துவங்கப்படும் என மத்திய ரயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதற்கு முன்னோட்டமாக இசாத்நகர் மற்றும் போஜ்புரா ரயில் நிலையங்களுக்கு இடையே ஸ்பெயின் நாட்டில் 30 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட அதிசொகுசு ரயில் பெட்டிகளை இந்திய ரயில் என்ஜினைக் கொண்டு இழுக்கச் செய்து சென்சார் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த பெட்டிகள் அனைத்தும் ஏற்கனவே தஜகிஸ்தான் உட்பட 12க்கும் மேற்பட்ட நாடுகளில் சோதிக்கப்பட்டவை. இந்த ரயில் பெட்டிகளில் பல சென்சார்கள் இருக்கும்.
அவை தண்டவாளங்கள் மற்றும் ரயில் அதிவேகத்திலும் கூட சரியாக இயங்குகிறதா? என்பதை துல்லியமாக கண்டறியக்கூடியவை. இந்த சோதனை வரும் யூன் 12ம் திகதி வரை நீடிக்கும்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top