இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையே சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றை உடனடியாக ஏற்படுத்திக்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
சர்வதேச வர்த்தக நடவடிக்கை தொடர்பாக அரச அமைச்சர் சுஜீவ சேனசிங்க அண்மையில் தாய்லாந்தில் மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது அந்நாட்டு வர்த்தக அலுவல்கள் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
2017ம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாகவும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் இப்பேச்சுவார்த்தையின்போது கருத்து தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அந்நாட்டின் கைத்தொழில் அமைச்சர் மற்றும் அந்நாட்டின் பல முக்கியஸ்தர்களுடன் அமைச்சர் சுஜீவ சேனசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

