Headlines
Admin-message

நான் மிகுந்த திருப்தியுடன் நாட்டு மக்கள் முன் நிற்கிறேன்: பிரதமர் மோடி

Published by tamilkurall on  | 

பிரதமர் மோடி ஆட்சியேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், 2 ஆண்டு சாதனை விளக்க விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
புதுடெல்லி இந்தியா கேட் பகுதியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்.
விழாவில் பேசிய மோடி, நான் மிகுந்த திருப்தியுடன் நாட்டு மக்கள் முன் நிற்கிறேன். மத்திய அரசு மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
மக்கள் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைக்க தயாராகி விட்டனர். மக்கள் மத்திய அரசின் செயல்பாடுகளை பரிசீலிப்பதால் நல்ல விளைவுகள் ஏற்பட்டுள்ளது.
முன்பை விட அரசின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. முந்தைய ஆட்சியை ஒப்பிடும் போதுதான் இந்த ஆட்சியில் நடந்த முன்னேற்றங்கள் தெரியும்.
ஊழலின் பற்களையும், நகங்களையும் பிடுங்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன்மூலம் நாட்டிற்கு பல கோடி ரூபாய் சேமிப்படைந்துள்ளது.
நான் மக்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன், ஒரு தரப்பின் கையில் முன்னேற்றம் உள்ளது. மற்றொரு தரப்பின் கையில் அதற்கான தடைகள் உள்ளது. மக்கள் ஒப்பிட்டு பார்த்து உண்மையை கண்டறிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் என பேசியுள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top