இலங்கையின் கடற்பிரதேச பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக ஜப்பான் இரண்டு பெற்றோல் படகுகளை வழங்கவுள்ளது.
ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே இந்த உறுதிமொழியை இலங்கையின் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று வழங்கியுள்ளார்.
ஆழ்கடல் மற்றும் கடல்பகுதி சட்டங்களை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த கப்பல்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் ஜப்பானிய நாகொயா நகரத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ஜப்பானின் இந்த உதவியானது இந்து சமுத்திர, கிழக்கு மற்றும் தென்சீனகடல் பகுதியில் சீனாவின் அதிகரித்த நடவடிக்கைகளுக்கு மத்தியில் வழங்கப்படவுள்ளதாக வெளிநாட்டு செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.

