Headlines
Admin-message

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பணியாளர்களுக்கு எதிராக கொள்கை தீர்மானம்

Published by Unknown on  | 



ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஆறு விமான பணியாளர்களுக்கு பணி நியமனக்கால நீடிப்பைமேற்கொள்ளப்போவதில்லை என்ற தீர்மானத்தை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முகாமைஎடுத்துள்ளது.
இதன்படி கடந்த மூன்று வருடங்களில்இந்தக்கொள்கை தீர்மானத்தின்படி கடந்த மூன்று வருடங்களுக்குள் பணிகளில்இணைந்துக்கொண்ட விமானப் பணிப்பெண்களுக்கான ஒப்பந்தக்காலமும் நீடிக்கப்படாது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விமான சேவைக்கு எதிராக தொழிற் சங்க நடவடிக்கையை எடுக்கப்போவதாகதொழிற்சங்கம் ஒன்று குறுஞ்செய்தி ஒன்றை பரப்பியமையை அடுத்தே இந்த தீர்மானம்எடுக்கப்பட்டுள்ளது.
இந்த குறுஞ்செய்தியை விமானப்பணியாளர்களின் முகாமையாளர் எட்ரியன் கிராமரேஅனுப்பியுள்ளார்.
இவரின் தலைமையில் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கம் ஒன்றை ஸ்ரீலங்கன்எயார்லைன்ஸின் முகாமை, உத்தியோகபூர்வ அங்கமாக ஏற்கமறுப்பதை அடுத்தே தொழிற்சங்கநடவடிக்கை எடுக்கப்போவதாக குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய விமானசேவையில் எந்தநேரத்திலும் பாதிப்புக்கள் ஏற்படக்கூடாதுஎன்பதை கருத்திற்கொண்டே கொள்கை தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்முகாமை தெரிவித்துள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top