Headlines
Admin-message

பொருத்து வீடுகள் சிறந்த வாய்ப்பாகும்: ஆய்வு அறிக்கை

Published by Unknown on  | 

                                       

போரினால் பாதிக்கப்பட்ட வடக்குகிழக்கின் மக்களுக்கு பொருத்து வீடுகள் சிறந்த வாய்ப்பு என்று பேராதெனிய பல்கலைக்கழக சிவில் பொறியியல் பீடத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பொருத்து வீடுகள் தொடர்பில் குறித்த திணைக்களம் கள ஆய்வு ஒன்றை நடத்தியது.
இதன்அடிப்படையில் வீடுகளுக்கு உள்ள உயர்ந்த கேள்விக்கு மத்தியில் இந்த பொருத்து வீடுகள் சிறந்த வாய்ப்பாக வடக்கு கிழக்கு மக்களுக்கு இருக்கும் என்று அந்த திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருத்து வீடுகளுக்குள் வெப்பநிலைக்கும் கல்வீடுகளின் வெப்பநிலைக்கும் பாரிய வித்தியாசங்கள் இல்லை.
பொருத்து வீடுகள் சூரியசக்தி இணைப்பு மற்றும் ஏனைய பல வசதிகளை கொண்டுள்ளன.
இந்தநிலையில் கல்வீடுகளின் நிர்மாண செலவுக்கும் இந்தவீடுகளின் நிர்மாண செலவுக்கும் இடையில் மாற்றங்கள் இல்லை என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்தப்பொருத்து வீடுகள், கோப்பாய் மற்றும் தெல்லிப்பளை பகுதிகளில் அமைக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top