இதேவேளை பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெறும் அனைத்து நடவடிக்கைகளையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டியது பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகங்களினதும் மாணவர்களினதும் எதிர்பார்ப்பினை நிவர்த்திசெய்வதற்கு அரசாங்கம் விரிவான கொள்கைகளை வைத்திருக்கின்றது.
இருப்பினும் மாணவர்கள் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு மற்றும் லிப்டன் சுற்றுவட்டப் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது முறையற்ற விடயமென சுட்டிக்காட்டியுள்ளார்.
இனி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை தவிர்த்து வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் பொறுப்பை ஏற்றுகொள்ள வேண்டும். எனவும் கூறியுள்ளார்.

