Headlines
Admin-message

சம்பூர் விவகாரம் இரு தரப்பிலும் தவறு! பிரதமர் நடுநிலை..

Published by Shaila on  | 

சம்பூர் கடற்படை முகாம் அதிகாரியை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டிய சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட நிலைமையில் இரண்டு தரப்பினரும் தவறிழைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலைமை தொடர்பாக அமைச்சர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

சம்பூர் சம்பவத்தில் பதவி நிலை தொடர்பான பிரச்சினை காணப்பட்டதாகவும் இரண்டு தரப்பிலும் பிரச்சினைகள் இருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு தரப்பில் இருந்து அறிக்கைகளை கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top