உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வுகள் எதிர்வரும் ஜூன் மாதம் 5ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாத்தளையில் நடைபெறவுள்ளது.
மாத்தளை எட்வட் விளையாட்டரங்களில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இம்முறை உலக சுற்றாட்ல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய மே மாதம் 30ம் திகதி முதல் ஜூன் மாதம் 5ம் திகதி வரையில் சுற்றாடல் வாரமொன்றும் அனுட்டிக்கப்பட உள்ளது.
“வனவிலங்குகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதனை தடுப்போம்” என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
43ம் தடவையாக இம்முறை உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மாத்தளை நகரில் பல்வேறு சுற்றாடல் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

