யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ தர்மரத்ன இன்று வியாழக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் காலை 10.00 மணியளவில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றுள்ளது.
அதன் பின்னர் பௌத்த, இந்து, இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ மத வழிபாட்டினை தொடர்ந்து பதிவேட்டில் கையொப்பமிட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் சட்டம் மற்றும் நீதிக்கு அமைவாக யாழில் நடைபெறும், குற்றச் செயல்களை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை நீதியின் வழியில் மேற்கொள்வேன் என்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மாத்தளை பொலிஸ் பிரிவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய இவர் யாழ்ப்பாணத்திற்கு பிரதிப் பொலிஸ்மா அதிபராக இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

