Headlines
Admin-message

அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு!

Published by Shaila on  | 

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸார் மற்றும் முறைப்பாட்டாளர் தரப்பு சட்டத்தரணிகள் ஆகியோர், தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் மொபிடெல் நிறுவனம் போதுமான ஒத்துழைப்புகளை வழங்குவதில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதவான், துரிதமாக தகவல்களை வழங்குமாறு குறித்த தொலைபேசி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
வசீம் தாஜூடீன் 2012 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்,

இந்த கொலை சம்பவம் விபத்து என அப்போதைய பொலிஸார் தெரிவித்திருந்தனர். ஆனால் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து சம்பவம் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டன.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top